பஞ்சு அருணாச்சலம் மறைவுக்கு ரஜினி இரங்கல்

திரைப்பட கதாசிரியரும், இயக்குனரும், தயாரிப்பாளருமான பஞ்சு அருணாச்சலம் நேற்று மதியம் மாரடைப்பால் காலமானார். அவரது உடலுக்கு திரையுலக பிரபலங்கள் பலரும் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினர். இந்நிலையில், ரஜினியும் பஞ்சு அருணாச்சலம் அவர்களின் மறைவுக்கு இரங்கல் செய்தி வெளியிட்டுள்ளார்.

Rajni-Panju-Arunachalam

இதுகுறித்து அவர் டுவிட்டரில் கூறும்போது, பஞ்சு சார், நான் உண்மையில் உங்களை இழப்பது துக்கமாக இருக்கிறது. உங்கள் ஆத்மா சாந்தி அடையட்டும் என்று தெரிவித்துள்ளார். வெள்ளித்திரையில் நிறைய படங்களுக்கு வசனகர்த்தாவாக பணியாற்றினாலும், ரஜினி, கமல் ஆகியோர் நடித்த படங்களுக்குத்தான் அதிகமாக இவர் வசனம் எழுதியுள்ளார்.

ரஜினி நடித்த ‘பாண்டியன்’, ‘தர்மதுரை’, ‘ராஜாதி ராஜா’, ‘குருசிஷ்யன்’, ‘பாயும்புலி’, ‘போக்கிரி ராஜா’, ‘முரட்டுக்காளை’ உள்ளிட்ட பல படங்களுக்கும் பஞ்சு அருணாச்சலம் வசனகர்த்தாவாக பணியாற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Posts