பஞ்சாப் விமானப்படைத் தளத்தில் பயங்கரவாத தாக்குதல்

பஞ்சாப் மாநிலம் பதன் கோட் விமானப் படை தளத்திற்குள் இன்று அதிகாலை 4.30 மணியளவில் நுழைந்த பயங்கரவாதிகள் திடீர் தாக்குதலில் ஈடுபட்டனர்.

Punjab-

இதனையடுத்து பாதுகாப்பு வீரர்கள் பயங்கரவாதிகள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தினர். இச்சம்பவத்தில் பயங்கரவாதிகள் இருவர் கொல்லப்பட்டனர். தொடர்ந்து இருதரப்பினரிடையே துப்பாக்கிச்சூடு நடைபெற்று வருகிறது. தாக்குதல் தொடர்ந்து நீடித்து வருவதால் ராணுவத்தினர் அழைக்கப்பட்டுள்ளனர். இரண்டிற்கும் மேற்பட்டவர்கள் இத்தாக்குதலில் ஈடுபட்டுள்ளதாக குர்தாஸ்பூர் போலீஸ் எஸ்.பி., தெரிவித்துள்ளார்.

மொத்தம் 6 பயங்கரவாதிகள் இந்த தாக்குதலில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. பாகிஸ்தானைச் சேர்ந்த ஜெய்ஸ் என்ற பயங்கரவாத அமைப்பிற்கு இதில் தொடர்பு இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. பஞ்சாப் மாநில எல்லைக்குள் பாகிஸ்தான் பயங்கரவாதிகள் நுழைந்திருப்பதாக நேற்றே உளவுத்துறை எச்சரிக்கை விடுத்திருந்தது.

மேலும் இம்மாதம் இந்தியா பாகிஸ்தான் இடையே அமைதி பேச்சு வார்த்தை நடைபெற உள்ள நிலையில் இந்த தாக்குதல் நடத்தப்பட்டிருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Related Posts