‘பஞ்சதந்திரம்-2’ பேச்சுவார்த்தை ஆரம்பம்

கமல்ஹாசனின் எவர்கிரீன் காமெடி படங்களில் ‛பஞ்சதந்திரம்’ படமும் ஒன்று. கேஎஸ் ரவிக்குமார் இயக்கத்தில் கமல், ஜெயராம், ரமேஷ் அரவிந்த், யூகி சேது, ஸ்ரீமன், சிம்ரன், ரம்யாகிருஷ்ணன், ஊர்வசி, சங்கவி, ஐஸ்வர்யா, நாகேஷ்…. என ஒரு பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்திருந்த இப்படம் 2002-ம் ஆண்டு வெளிவந்து சூப்பர் ஹிட்டானது. கமல், கிரேஸி மோகன் இணைந்து இந்த கதையை எழுதியிருந்தார்கள், பிஎல் தேனப்பன் தயாரித்திருந்தார்.

இந்நிலையில் இப்படத்தின் இரண்டாம் பாகம் உருவாக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. சமீபத்தில் நடிகர் கமல்ஹாசனை, கேஎஸ் ரவிக்குமார் சந்தித்ததாகவும், அப்போது பஞ்சதந்திரம்-2 படத்திற்கான கதையைப்பற்றி இருவரும் விவாதித்ததாகவும் கூறப்படுகிறது. விரைவில் பஞ்சதந்திரம்-2 படத்திற்கான அறிவிப்பு வெளியாகும் என தெரிகிறது.

Related Posts