பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஷ, விரைவில் யாழ்ப்பாணத்திற்கு வருகை தரவுள்ளார் என்று பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் பிரதி அமைச்சர் சுசந்த புஞ்சி நிலமே தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணத்துக்கு நேற்று விஜயம் மேற்கொண்ட பிரதி அமைச்சர் சுசந்த புஞ்சி நிலமே, யாழ். மாவட்ட செயலகத்தில் பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் கீழான அதிகாரிகளுடன் அமைச்சினால் நடைமுறைப்படுத்தும் வேலைத்திட்டங்கள் குறித்து ஆராயும் போதே மேற்கண்டவாறு தொவித்தார்.
அத்துடன், யாழ். மாவட்டத்தில் கட்டிட வேலைகளில் தாமதம் இருப்பதை சுட்டிக்காட்டியதுடன் உரிய நேரத்தில் வேலைகளை நடைமுறைப்படுத்துமாறும் அப்போதுதான் மேலதிகமான வேலைகளை இலகுவாக செய்யமுடியுமென்றும் உள்ளூர் உற்பத்தி பொருட்களை மாதாந்தம் விற்பனை செய்வதற்கான சந்தை வாய்ப்பு ஆரம்பிக்கப்படவுள்ளதாகவும் அவர் கூறினார்.