முன்னாள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஷவுக்கு, ஒன்றிணைந்த எதிர்க்கட்சியில் தேசிய அமைப்பாளர் பதவி வழங்கப்படவுள்ளதாக உத்தியோகபற்றற்ற தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஒன்றிணைந்த எதிர்க்கட்சி தேசிய அமைப்பாளராக தற்போது செயற்படுகின்ற மாத்தறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் டளஸ் அழகபெரும, நாடாளுமன்றத்துக்குள் ஒன்றிணைந்த எதிர்க்கட்சியின் செயற்பாடுகளை வழிநடத்தும் முழுப்பொறுப்பு வழங்கப்படவுள்ளதாக அறியமுடிகின்றது.
கிருலப்பனையில் இடம்பெறும் ஒன்றிணைந்த எதிர்க்கட்சியின் மேதினக் கூட்டத்துக்கு பின்னர் இந்த மாற்றங்கள் மேற்கொள்ளப்படும் என்றும் அறியமுடிகின்றது.