திவிநெகும முறைகேடுகள் தொடர்பில் முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷ உள்ளிட்ட இருவருக்கு எதிராக முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுக்களை சட்டமா அதிபர் மீளப்பெற்றுள்ளார்.
முன்வைக்கப்பட்ட குற்றப்பத்திரிகையில் சில கோளாறுகள் காணப்படுவதால், மீண்டும் இது குறித்து வழக்குத் தாக்கல் செய்ய எதிர்பார்த்துள்ளதாக சட்டமா அதிபர் சார்பில் ஆஜரான அரச தரப்பு சட்டத்தரணி குறிப்பிட்டார்.
ஆகவே குறித்த குற்றப் பத்திரிகையை மீளப் பெற அனுமதிக்குமாறும் அரச தரப்பு சட்டத்தரணி கோரிக்கை விடுத்தார்.
இதனை ஏற்றுக் கொண்ட மேல் நீதிமன்ற நீதிபதி பத்மினி என்.ரணவக்க இதற்கு அனுமதியளித்துள்ளார்