பகிரங்க விவாதத்துக்கு மஹிந்தவை அழைக்கிறார் மைத்திரிபால!

அடுத்த மாத முற்பகுதியில், முடிந்தால் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ என்னுடன் பகிரங்க விவாதத்துக்கு வரட்டும். இவ்வாறு நேற்று புதன்கிழமை சவால் விடுத்துள்ளார் பொது எதிரணிகளின் ஜனாதிபதி வேட்பாளர் மைத்திரிபால சிறிசேன.

mythiri

கொழும்பு பம்பலப்பிட்டியில் நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவர் இந்தச் சவாலை விடுத்தார்.

நாட்டின் ஜனநாயகம், நல்லாட்சி குறித்து தான் பகிரங்கமாக விவாதிக்க தயார் என்றும் மைத்திரி தெரிவித்தார். ஜனாதிபதி விவாதத்துக்கு ஒப்புக்கொண்டால், கைகளில் எந்த தயார்ப்படுத்தல் ஆவணங்களுமின்றி கலந்துகொள்ள நான் தயாராக இருக்கிறேன் என்றும் மைத்திரி கூறினார்.

நாடாளுமன்றத்தில் தமக்கு இருக்கும் 2/3 பெரும்பான்மையைக் கொண்டு 18 ஆவது திருத்தத்தை ஜனாதிபதி மஹிந்த நிறைவேற்றியுள்ளார். எனவே, ஜனவரி 8 ஆம் திகதி நான் ஜனாதிபதியாகத் தெரிவுசெய்யப்பட்டால், மக்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளை 100 நாட்களில் கட்டாயமாக நிறைவேற்றுவேன்.-என்றார்.

Related Posts