பகிரங்கமாக தோல்வியை ஒப்புக்கொண்ட உக்ரைன் இராணுவம்!

ரஷ்யாவின் மற்ற ஏவுகணைகளை, உக்ரைன் இராணுவம் சுட்டுவீழ்த்தி வரும் நிலையில், ‘பி-800 ஒனிக்ஸ் யாக்ஹான்ட்’ ஏவுகணையை மட்டும் சுட்டு வீழ்த்த முடியவில்லை என்ற தகவல் வெளியாகி உள்ளது.

கடந்த, 20ஆம் திகதி ஒடெசா நகரம் மீது, ரஷ்யா இராணுவம், காலிபர், இஸ்கந்தர், பி-800 ஒனிக்ஸ் யாக்ஹான்ட் ஏவுகணைகள் வாயிலாக தாக்குதல் நடத்தியது.

காலிபர், இஸ்காந்தர் ஏவுகணைகளை சுட்டு வீழ்த்திவிட்டோம். ஆனால், மணிக்கு, 3,000 கி.மீ வேகத்தில் பயணிக்கும் பி-800 ஒனிக்ஸ் யாக்ஹான்ட் ஏவுகணைகளில் ஒன்றை கூட சுட்டுவீழ்த்த முடியவில்லை என உக்ரைன் இராணுவ வட்டாரங்கள் தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மேலும் எங்களிடம் உள்ள அமெரிக்க, ஐரோப்பிய நாடுகளின் அதிநவீன பாதுகாப்பு தடுப்பு ஏவுகணைகள், எங்களின் எல்லைக்குள் ரஷ்யா ஏவுகணைகள் உள்ளே நுழைந்தால், அவற்றை தானாகவே சீறிப் பாய்ந்து அழிக்கும்.

ஆனால், பி-800 ஒனிக்ஸ் யாக்ஹான்ட் ஏவுகணை இலக்கை தாக்கும்போது தரை அல்லது கடல் மட்டங்களில் இருந்து, 10 முதல் 15 மீட்டர் உயரத்தில் பறப்பதாலும், அமெரிக்க, ஐரோப்பிய நாடுகளின் பாதுகாப்பு வளையங்களை தாண்டி பறப்பதாலும், அவற்றை சுட்டு வீழ்த்துவது கடினமாக உள்ளது என அந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

இது தொடர்பில் ரஷ்ய பாதுகாப்புத்துறை அதிகாரிகள் கூறுகையில்,ரஷ்ய இராணுவத்திடம் இருந்த, 470, பி-800 ஒனிக்ஸ் யாக்ஹான்ட் ஏவுகணைகளில், 123 ஏவுகணைகள் போரில் பயன்படுத்தப்பட்டுள்ளன. மிக முக்கிய தாக்குதல்களுக்கு மட்டுமே, இவற்றை பயன்படுத்தி வருகிறோம் என தெரிவித்துள்ளன.

இதேவேளை ரஷ்யாவிடம் உள்ள பி-800 ஒனிக்ஸ் யாக்ஹான்ட் ஏவுகணைகளை விட, இந்தியாவில் தயாரிக்கப்படும் பிரம்மோஸ் ஏவுகணைகள், 450 கி.மீ தூரம் சீறிப் பாயும், அதிக திறன் கொண்டவை.

பிரம்மோஸ் ஏவுகணைகளை வாங்க, பிலிப்பைன்ஸ், வியட்நாம், இந்தோனேசியா, ஐக்கிய அரபு அமீரகம், சவுதி அரேபியா உட்பட பல்வேறு நாடுகள் முன்வந்துள்ளன.

பிரம்மோஸ் ஏவுகணைகளை தொடர்ந்து, 1,500 கி.மீ தூரம் பாயும், பிரம்மோஸ் ஹைப்பர்சானிக் ஏவுகணைகள் தயாரிக்கப்பட உள்ளன. அடுத்த ஐந்தாண்டுகளுக்குள் இவை தயாரிக்கப்படும்.

இந்த ஏவுகணைகள், 9,000 கி.மீ வேகத்தில் சீறிப் பாயும். இதற்கான ஆராய்ச்சிகள் தொடங்கி நடந்து வருகின்றன என இந்திய பாதுகாப்புத்துறை அதிகாரிகள் கூறியுள்ளனர்.

இந்திய இராணுவ ஆராய்ச்சி மையம், ரஷ்யாவின் என்.பி.ஓ.எம் நிறுவனம் ஆகியவை இணைந்து, பிரம்மோஸ் என்ற, சூப்பர்சானிக் ஏவுகணைகளை தயாரித்து வருகின்றன.

ஒலியைவிட, ஐந்து மடங்கு வேகத்தில், சீறிப் பாயக்கூடிய இந்த ஏவுகணைகள், இந்தியாவில் பிரம்மோஸ் எனவும், ரஷ்யாவில் பி-800 ஒனிக்ஸ் யாக்ஹான்ட் என்ற பெயரிலும் பயன்பாட்டில் உள்ளன.

Related Posts