பகிடிவதை: யாழ். பல்கலை மாணவன் தற்கொலை முயற்சி

பகிடிவதை காரணமாக யாழ். பல்கலைக்கழக மாணவனொருவர் தற்கொலைக்கு முயற்சித்த சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது.

பல்கலைகழகத்தில் தான் மோசமாக பகிடிவதைக்கு உள்ளாகி வருவதாக வீட்டிலிருந்தவர்களிடம் தெரிவித்திருந்த மாணவன் நேற்று (வெள்ளிக்கிழமை) திடீரென அறைக்குள் சென்று தற்கொலை முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.

அதனை அவதானித்த குடும்பத்தினர் மாணவனை மீட்டு உடனடியாக பளை வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.

இந்நிலையில், குறித்த மாணவன் மேலதிக சிகிச்சைகளுக்காக கிளிநொச்சி வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

யாழ். பல்கலைகழக கிளிநொச்சி வளாகத்தில் கற்கும் பளை பகுதியை சேர்ந்த முதலாம் வருட மாணவனே இவ்வாறு தற்கொலைக்கு முயற்சித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related Posts