பகிடிவதையில் ஈடுபட்ட மாணவர்கள் எண்மருக்கு வாழ்நாள் தடை விதிக்க நடவடிக்கை!!

வடக்கு – கிழக்கில் உள்ள 2 பல்கலைக்கழகங்களைச் சேர்ந்த 8 மாணவர்களுக்கு ஆயுட்காலம் தடை விதிக்க பல்கலைக்கழக மானிய ஆணைக்குழு நடவடிக்கை எடுத்துள்ளது.

பகிடிவதைச் சம்பவங்களுடன் தொடர்புபட்டுள்ளதால், யாழ்ப்பாணம், தென்கிழக்கு பல்கலைக்கழகங்களைச் சேர்ந்த 8 மாணவர்களே இந்த வாழ்நாள் தடையை எதிர்கொள்ளவுள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒலுவில் பல்கலைக்கழகத்தில் பிரயோக விஞ்ஞான பீடத்தின் புதுமுக மாணவர்கள் பகிடிவதைக்கு உள்படுத்தப்படுவதாக பல்கலைக்கழக மானிய ஆணைக்குழுவுக்கு தகவல் கிடைத்துள்ளது. அதனடிப்படையில் பகிடிவதை புரியும் மாணவர்கள் வெளியேற்றப்படவேண்டிய கட்டாயம் ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதுமுக மாணவர்களை பகிடிவதைக்குள்ளாக்கும் முதுநிலை மாணவர்கள் சிலர் அவர்களை பல்கலைக்கழகத்தில் வலுக்கட்டாயமாக வைத்திருந்ததாகவும், வார இறுதி நாள்களில் வீடு திரும்புவதைத் தடுத்ததாகவும் கூறப்படுகிறது.

Related Posts