பகிடிவதைகளைத் தடுப்பது குறித்து ஜனாதிபதி பணிப்புரை

பல்கலைக்கழகங்களில் இடம்பெறும் பகிடிவதைகளைத் தடுப்பது குறித்து விஷேட அவதானத்துடன் செயற்படுமாறும், இதற்காக பல்கலைக்கழக நிர்வாக அதிகாரிகளுடன் இணைந்து செயற்பாட்டு வேலைத் திட்டங்களை தயாரிக்குமாறும் பொலிஸ் மா அதிபருக்கு பணிப்புரை வழங்கியுள்ளதாக, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

பல்கலைக்கழக மாணவர்களின் எதிர்காலம் குறித்து அரசாங்கத்திற்கு பொறுப்புள்ளதாகவும், அந்த பொறுப்பை எந்தவொரு தயக்கமும் இன்றி நிறைவேற்றுவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலும், பல்கலைக்கழகங்களுக்குள் மிலேச்சத்தனங்களுக்கு இடமளிக்க முடியாது எனவும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.

மதுகம பகுதியில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் போதே அவர் மேற்கண்டவாறு கருத்து வௌியிட்டுள்ளார்.

Related Posts