இனி இலங்கை திரையரங்குகளில் தொலைபேசிக்கு தடை?

திரையரங்குகளில் தொலைபேசிப் பாவனையைத் தடை செய்யுமாறு திரைப்பட இயக்குநர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

அண்மையில் திரைப்படமொன்று சட்டவிரோதமாகப் பதிவுசெய்யப்பட்டு ஊடகங்களில் பதிவேற்றப்பட்ட சம்பவத்தைத் தொடர்ந்தே அவர்கள் இவ்வாறு கோரிக்கை விடுத்துள்ளனர்.

இது தொடர்பில் திரையரங்கு உரிமையாளர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என திரைப்பட இயக்குநர் ஜயந்த சந்திரசிறி கோரிக்கை விடுத்துள்ளார்.

அத்துடன், இலங்கை திரைப்படக் கூட்டுத்தாபனமும் இது தொடர்பில் உத்தியோகபூர்வ உத்தரவினை பிறப்பிக்க வேண்டும் எனவும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

பிரபல இயக்குநரின்‘சிங்கபாகு’ திரைப்படத்தை சட்டவிரோதமாக பதிவு செய்து யூடியூப்பில் பதிவேற்றிய குற்றச்சாட்டில் கண்டியைச் சேர்ந்த 24 வயதுடைய நபர் ஒருவர் அண்மையில் கைது செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related Posts