இனப்படுகொலைக்கு சர்வதேச விசாரணை மூலமே நீதி கிடைக்கும்! – கஜேந்திர குமார்

தமிழ் மக்கள் மீது நடத்தப்பட்ட இனப்படுகொலைக்கும் மனித உரிமை மீறல்களுக்கும் சர்வதேச விசாரணை பொறிமுறை ஊடாகவே நீதி கிடைக்கும் என தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.

குற்றம் செய்தவர்களே குற்றம் குறித்து விசாரணை செய்ய வேண்டியதில்லை. இதனை ஒருபோதும் ஏற்றுக் கொள்ள முடியாது என்றும் அவர் தெரிவித்தார்.

தமிழ் மக்கள் மீது நடத்தப்பட்ட இனப்படுகொலைக்கும் மனித உரிமை மீறல்களுக்கும் சர்வதேச விசாரணை பொறிமுறை உருவாக்கப்பட வேண்டும் எனக்கோரி சர்வதேச பொறுப்புகூறல் பொறிமுறைக்கான செயற்பாட்டு குழுவின் ஒழுங்கமைப்பில் இரண்டாவது நாளாக நேற்று யாழ். மாவட்டத்தில் 5 இடங்களில் கையெழுத்து போராட்டம் நடத்தப்பட்டது. இந்த போராட்டத்தில் கலந்து கொண்டு ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போது அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

Related Posts