ஒருநாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு நேற்று (07) இலங்கை வந்த நோர்வே வௌிவிவகார அமைச்சர் போர்ஜ் பிரன்டே (Borge Brende) நேற்று எதிர்கட்சித் தலைவர் இரா.சம்பந்தனை சந்தித்து கலந்துரையாடினார்.
இச்சந்திப்பின் போது எதிர்கட்சித் தலைவர் மேற்கொண்ட புதிய அணுகுமுறையை பாராட்டிய நோர்வே வௌிவிவகார அமைச்சர் இதனூடாக மக்களின் எதிர்பார்ப்புக்களை, தேவையை நிறைவேற்ற முடியும் என்று தான் நம்புவதாக நம்பிக்கை வௌியிட்டார்.
தமிழ் மக்கள் அன்றாடம் சந்திக்கும் பிரச்சினைகள், காணி பிரச்சினை, இராணுவம் அதிகம் நிலைநிறுத்தப்பட்டுள்ளமை போன்ற விடயங்கள் தொடர்பில் நோர்வே வௌிவிவகார அமைச்சரை தௌிவுபடுத்திய எதிர்கட்சித் தலைவர், தமிழ் மக்கள் ஒன்றிணைந்து செயற்படுவதனூடாக தமது இலக்கை அடைய முடியும் என்பதையும் சுட்டிக்காட்டினார்.
இச்சந்திப்பின் போது பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் உடனிருந்தார்.