ரயன் எயர் விமானத்தில் சந்தேசத்திற்கிடமான முறையில் நடந்துகொண்ட இலங்கையர் ஒருவர், நோர்வேயின் மொஸ் விமானநிலையத்தில் நோர்வேக் காவல்துறையினரால் தடுத்துவைக்கப்பட்டுள்ளார்.
இலங்கையரும் வேறு நாட்டவர் ஒருவரும் சந்தேகத்திற்கிடமான முறையில் நடமாடிய காரணத்தினால் கைதுசெய்யப்பட்டுள்ளதாக நோர்வேக் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
விமானம் மான்செஸ்டர் நோக்கிப் பயணித்துக்கொண்டிருந்தவேளையில் கழிவறையில் இவர்கள் இருவரும் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாகவும், இதன்போது குண்டு என்ற வார்த்தையைப் பிரயோகித்ததாக ஏனைய பயணிகள் தெரிவித்துள்ளர்.
இதனையடுத்து விமானம் மொஸ் விமானநிலையத்தில் தரையிறக்கப்பட்டு சோதனை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டது. இதையடுத்து எந்தவொரு குண்டுகளும் அங்கே கண்டுபிடிக்கப்படவில்லையென காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இருவரும் விடுவிக்கப்பட்டுள்ளதுடன், ஒரு மணித்தியாலம் கழித்தே விமானம் புறப்பட்டுள்ளதாகவும் அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன.