நோயின் உக்கிரத்தை தாங்க முடியாமல் 63 வயதான பெண்மணியொருவர் நேற்று அதிகாலை கிணற்றில் வீழ்ந்து தற்கொலை செய்து கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் யாழ்ப்பாணம், பண்டத்தரிப்பில் இடம்பெற்றுள்ளதாக இளவாலைப் பொலிஸார் கூறுகின்றனர்.
பிள்ளையார் கோயிலடி வீதி, பண்டத்தரிப்பைச் சேர்ந்த மூதாட்டியே இவ்வாறு மரணமானார்.
தனது நோயின் தாக்கத்தை தாங்க முடியாமல் கிணற்றில் வீழ்ந்து தற்கொலை செய்துள்ளார் என விசாரணைகளில் இருந்து தெரியவருவதாக இளவாலைப் பொலிஸார் தெரிவித்தனர்.
சடலம் மரண விசாரணைளின் பின் யாழ்ப்பாண போதனா மருத்துவமனை பிரேத அறையில் வைக்கப்பட்டிருந்தது.