தனியார் பஸ் ஊழியர்களின் ஆர்ப்பாட்டம் காரணமாக இலங்கை போக்குவரத்துச் சபைக்கு வருமானம் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சாலை விதிகளை மீறுவோறுக்கு எதிரான அபராதத் தொகையை அதிகரித்தமையை கண்டித்து நேற்றையதினம் தனியார் பஸ் ஊழியர்கள் பணிப் பகிஷ்கரிப்பை முன்னெடுத்தனர்.
மறுபுறம் சேவையில் ஈடுபட்டிருந்த அரச பேருந்துகளினால் பெறப்படும் வருமானம் நேற்றையதினம் அதிகரித்துள்ளதாகவும், இந்த அதிகரிப்பு நூற்றுக்கு 66 வீதம் எனவும் இலங்கை போக்குவரத்துச் சபையின் தலைவர் ரமல் சிறிவர்த்தன குறிப்பிட்டுள்ளார்.
மேலும், சாதாரணமாக இலங்கை போக்குவரத்துச் சபையின் நாளாந்த வருமானம் 72 மில்லியன் ரூபாய் எனவும் சுட்டிக்காட்டிய அவர், நேற்றையதினம் அது 120 மில்லியன் ரூபாவாக காணப்பட்டதாகவும் தெரிவித்தார்.