நேற்றய போட்டியிலும் பாகிஸ்தானே வெற்றி!

இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையில் நேற்று நடைபெற்ற நான்காவது ஒருநாள் போட்டியிலும் பாகிஸ்தான் அணி வெற்றி பெற்றதனால் 4 -0 என்ற அடிப்படையில் பாகிஸ்தான் முன்னணியில் உள்ளது.

நேற்றைய போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி அனைத்து விக்கட்டுக்களையும் இழந்து 43.4 ஓவர்களில் 173 ஓட்டங்களைப் பெற்றது.

இலங்கை அணிக்கு லஹிரு திரிமான்ன 62 ஓட்டங்களையும், சுரங்க லக்மால் ஆட்டமிழக்காமல் 23 ஓட்டங்களையும் பெற்றுக் கொடுத்தனர்.

பதிலுக்குத் துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் அணி மூன்று விக்கெட் இழப்புக்கு 39 ஆவது ஓவர் நிறைவில் 177 ஓட்டங்களைக் குவித்தது. இதன்படி, 7 விக்கெட்டுக்களால் தொடரின் நேற்றைய போட்டியையும் பாகிஸ்தான் கைப்பற்றியது.

பாகிஸ்தான் சார்பில் பாபர் அஸாம் மற்றும் சுஐப் மலிக் ஆகியோர் தலா 69 ஓட்டங்களை அணிக்குப் பெற்றுக் கொடுத்து ஆட்டமிழக்காமல் களத்தில் வெற்றி இலக்கை அடைந்தனர்.

Related Posts