நேற்றய தினம் மட்டும் 5பேர் கைது

பயங்கரவாத நடவடிக்கையுடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தின் பேரில் இன்று (07-12-2012) 5பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக முறைப்பாடு பதிவு செய்யப்பட்டள்ளதாக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ். பிராந்திய இணைப்பாளர் த.கனகராஜ் இன்று தெரிவித்தார்.

யாழ். மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் 5 நபர்கள் கைதுசெய்யப்பட்டதுடன் யாழ். மற்றும் கிளிநொச்சி பகுதிகளில் கடந்த 3 தினங்களில் 17 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக உறவினர்களினால் முறைப்பாடுகள் பதிவு அவர் மேலும் கூறினார்.

இவர்கள், கைதுசெய்யப்பட்டதற்கான ஆவணங்களும் உறவினர்களிடம் வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் கூறினார்.

Related Posts