நேற்றய தினமும் இரு சடலங்கள் மீட்பு!

dead-footபுத்தூர் கிழக்குப் பகுதியிலுள்ள வீடொன்றிலிருந்து ஆணொருவரின் சடலம் நேற்று காலையில் மீட்கப்பட்டதாக அச்சுவேலிப் பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த பகுதியினைச் சேர்ந்த சுந்தரலிங்கம் இராமச்சந்திரன் (55) என்ற நபரே மேற்படி சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

மேற்படி நபர் ஞாயிற்றுக்கிழமை (15) இரவு தனது குடும்பத்தினருடன் கதைத்துக்கொண்டிருந்து விட்டு படுக்கையறைக்குச் சென்றவர் திங்கட்கிழமை (16) காலை சடலமாகவே காணப்பட்டார் என குடும்பத்தினர் தெரிவித்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.

இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை தாம் மேற்கொண்டுவருவதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

இதேவேளை மறவன்புலோ மேற்கிலுள்ள வீடொன்றில் இருந்து 3 பிள்ளைகளின் தாயான எஸ். ரஞ்சனாதேவி (வயது 46) என்பவரும் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக சாவகச்சேரி பொலிஸார் தெரிவித்தனர்.

வீட்டுத்திட்டத்தில் இவருக்கு வழங்கப்பட்ட பணத்திற்கு மேலதிகமாக கடன்களை பெற்று குறித் பெண் வீடு கட்டியுள்ளதாகவும், இதன் காரணமாக கடன் தொல்லை இருந்ததாகவும் அயலவர்கள் தெரிவித்ததாகப் பொலிஸார் கூறினர்.

குறித்த பெண்ணின் சடலம் தற்போது சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

இச்சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை சாவகச்சேரி பொலிஸார் ஆரம்பித்துள்ளனர்.

Related Posts