சுழிபுரம் சந்தியில் பாடசாலை மாணவன் விபத்துக்குள்ளாகி இன்று (05) காலை உயிரிழந்துள்ளார்.
விபத்து சம்பவம் குறித்து மேலும் தெரிய வருவதாவது,
17 வயதான முருகசோதி சிறி பானுசன் மோட்டார் வாகனத்தில் மூளாய் நோக்கி பயணித்துள்ளார். இந்நிலையில் சுழிபுரம் சந்தியில் வேகக்கட்டுபாட்டினை இழந்து மின்சார கம்பத்துடன் மோதிய நிலையில் உயிரிழந்துள்ளார்.
இந்நிலையில் மோட்டார் வாகனத்தில் உடன் பயணித்த 15 வயது மதிக்கத்தக்க மற்றுமொருவர் காயங்களுக்குள்ளான நிலையில் யாழ். போதான வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
குறித்த மாணவன் சுழிபுரம் விக்டோரியா கல்லூரியின் கணித பிரிவில் கல்வி கற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
சம்பவம் குறித்து நேரில் பார்த்தவர்கள் தெரிவிக்கையில்,
இருவர் கீழ் விழுந்திருந்தனர். மோட்டார் வாகனத்தை காணவில்லை அதன் உரிமையாளர் எடுத்து சென்றிருந்தனர். 1990 சேவைக்கு அழைத்து சுமார் 20 நிமிடங்களுக்கு மேலாகியும் வரவில்லை. மூளாய் கூட்டுறவு வைத்தியசாலைக்கு தொடர்பு எடுத்தும் அவர்கள் என்ன எதற்கு என கேள்விகளை வினவினர் ஆனால் நேயாளர் காவு வண்டி வரவில்லை. தொடர்ந்து உறவினர்களுக்கு அறிவித்து பின்னர் உயிரிழந்தவரின் நண்பர்களும் வந்தனர்.
இந்நிலையில் பட்டாரக வாகனத்தில் கொண்டு செல்லும் போது தீவிர தன்மையை கருத்திற் கொண்டு மூளாய் கூட்டுறவு வைத்தியசாலைக்கு கொண்டு செல்லபட்ட பொழுது அங்கு 17 வயதானவர் உயிரிழந்துள்ளதாகவும் மற்றையவரை யாழ். போதனா வைத்தியசாலைக்கும் மாற்றினர்.
இதேவேளை உயிரிழந்த மாணவனின் தாயார் சம்பவ இடத்தில் மயங்கி விழுந்துள்ளார். இந்நிலையில் தாமதமாக வருகை தந்த நோயாளர் காவு வண்டி அவரை ஏற்ற நாம் வரவில்லை அவரை வேறு வாகனத்தில் அனுப்புங்கள் என கூறி சென்றனர்.
குறித்த இடத்தில் இருந்து அகற்ற பட்டிருந்த மோட்டார் வாகனத்தை வட்டுக்கோட்டை பொலிஸார் பின்னர் மீட்டிருத்தனர்.
சம்பவம் தொடர்பில் வட்டுக்கோட்டை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தெரிவிக்கையில்,
சுழிபுரம் சந்தியில் விபத்து ஒன்று நிகழ்ந்துள்ளது. மேலும் ஒருவர் இறந்துள்ளார். மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளோம் என தெரிவித்தார்.