Ad Widget

நேபாளத்தின் முதல் பெண் ஜனாதிபதியாக பித்யா தேவி பண்டாரி தெரிவு!

நேபாளத்தின் முதல் பெண் ஜனாதிபதியாக பித்யாதேவி பண்டாரி (Bidhya Devi Bhandari) தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

nepalam-

நேபாளத்தில் புதிய அரசியல் சட்டம் ஏற்படுத்தப்பட்ட பிறகு நடந்த தேர்தலில் புதிய அதிபராக 54 வயதுடைய பித்யா தேவி பண்டாரி வெற்றி பெற்றுள்ளார். ஐக்கிய மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட் கட்சியின் (United Marxist Leninist) துணைத் தலைவரான இவர் 327 வாக்குகள் பெற்று, வெற்றி பெற்றார்.

இந்த தேர்தலில் இவரை எதிர்த்து போட்டியிட்ட நேபாள காங்கிரஸ் சார்பில் குல்பகதூர் குருங் 214 வாக்குகள் பெற்று தோல்வி அடைந்தார். இதன் மூலம் நேபாள நாட்டு அதிபராக முதல் முறையாக பெண் ஒருவர் தேர்வு செய்யப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

மன்னர் ஆட்சி மறைந்து 2008 ஆம் ஆண்டில் குடியரசு நாடாக, நேபாளம் அறிவிக்கப்பட்ட போது அதன் அதிபராக ராம் பரண் யாதவ் பொறுப்பேற்றார். அதனைத் தொடர்ந்து கடந்த செப்டெம்பர் 20 ஆம் திகதி, நேபாளத்தில் புதிய அரசியல் சாசனம் பிரகடனம் செய்யப்பட்டதை அடுத்து, அங்கு புதிய அதிபருக்கான தேர்வு நேற்று நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது.

Related Posts