நெல்லையில் முகாமிடும் விஜய்யின் பைரவா டீம்!

பரதன் இயக்கத்தில் விஜய் நடித்து வரும் பைரவா படப்பிடிப்பு பல மாதங்களாக இடைவிடாமல் நடந்து வருகிறது. சென்னை, ஐதராபாத் உள்பட சில வெளிநாடுகளிலும் நடந்து வந்த நிலையில், சென்னையில் உள்ள பின்னி மில்லில் பல செட்டுகள் போட்டு படப்பிடிப்பு அவ்வப்போது நடத்தப்பட்டது.

vijai-bairava

அந்த வகையில், இந்த படத்தில் இரண்டு வேடங்களில் நகரத்தில் உள்ள விஜய் சம்பந்தப் பட்ட காட்சிகள் அனைத்தும் படமாக்கப்பட்டு விட்டன. தற்போது நெல்லையிலுள்ள கிராமத்தில் வாழும் விஜய் சம்பந்தப்பட்ட காட்சிகள்தான் படமாக்கப்பட வேண்டியுள்ளது.

அதனால், இதுவரை திருநெல்வேலி சென்று படப்பிடிப்பு நடத்தப்போவதாக சிலதடவை சொல்லி பின்னர் கேன்சல் செய்யப்பட்ட நிலையில், தற்போது இறுதிகட்டமாக நெல்லையில் படப்பிடிப்பு நடத்துகிறார் பரதன்.

கிராமத்தில் வாழும் விஜய் சம்பந்தப்பட்ட காட்சிகள் இனிமேல்தான் படமாக்கப்பட உள்ளதாம். இதற்காக நேற்று மாலையே பைரவா யூனிட் நெல்லை புறப்பட்டு சென்று விட்டது. அடுத்தபடியாக விஜய், ஜெகபதிபாபு, டேனியேல் பாலாஜி, சதீஷ் உள்பட பல நடிகர்களும் அடுத்தடுத்து நெல்லை செல்கிறார்களாம்.

Related Posts