நெல்லியடியில் துஷ்பிரயோகங்கள் நடைபெற்றதாக குற்றம்சாட்டப்பட்ட பச்சை குத்தும் நிலையம் ஒன்று வடமராட்சி தென் மேற்கு பிரதேச சபையினால் மூடப்பட்டுள்ளது.
குறித்த பச்சை குத்தும் நிலையத்தில், சிறுவர்களுக்கு பச்சை குத்தப்பட்டதாகவும், துஸ்பிரயோகங்கள் நடைபெற்றதாகவும், சுகாதாரத்திற்கு தீங்கான வகையில் பச்சை குத்தும் செயற்பாடுகள் நடைபெற்றதாகவும் குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளன.
அது தொடர்பில் பிரதேச சபையினால் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில் குறித்த பச்சை குத்தும் நிலையம் மூடப்பட்டுள்ளது.