நெதர்லாந்திற்கு பகிரங்கமாக மிரட்டல் விடுத்துள்ள ரஷ்யா

நெதர்லாந்தின் ஹேக் நகரத்தில் உள்ள சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் (ICC) மீது ஏவுகணை தாக்குதல் நடத்தப்போவதாக முன்னாள் ரஷ்ய அதிபர் மிரட்டல் விடுத்துள்ளார்.

ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினுக்கு எதிராக சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் பிடியாணை உத்தரவை பிறப்பித்ததையடுத்து அவர் இந்த மிரட்டலை விடுத்துள்ளார்.

மேலும், ரஷ்யாவின் முன்னாள் அதிபர் டிமிட்ரி மெத்வதேவ் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தை ஏவுகணை வீசி தாக்கவுள்ளதாகவும் அச்சுறுத்தியுள்ளார்.

முன்னாள் ரஷ்ய ஜனாதிபதி மெட்வெடேவ் சர்வதேச குற்றவியல் நீதிமன்ற நீதிபதிகளை “வானத்தை உன்னிப்பாக கண்காணிக்க வேண்டும்” என்றும் எச்சரித்துள்ளார்.

உக்ரைனில் நடந்த போர்க்குற்றங்களுக்கு புடின் மீது சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் குற்றம்சாட்டியுள்ள நிலையில், உக்ரைனில் எந்த அட்டூழியமும் செய்யவில்லை என்று ரஷ்யா மறுத்துள்ளது.

Related Posts