நெடுந்தீவைச் சேர்ந்த ஒரே குடும்பத்தில் 4 பெண்கள் தொடருந்து விபத்தில் உயிரழந்தனர்.
வவுனியா ஓமந்தை பன்றிகெய்தகுளம் பகுதியில் நேற்று காலை 10.30 மணியளவில் தொடருந்துடன் கார் மோதுண்டமையால் இந்தப் பெரும் துயரம் இடம்பெற்றது.
யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு நோக்கி பயணித்துக்கொண்டிருந்த தொடருந்துடன் சிறிய கார் ஒன்று, மோதுண்டு விபத்து ஏற்பட்டது.
பாதுகாப்பற்ற புகையிரத கடவையை கடக்க முற்பட்ட போதே விபத்து ஏற்பட்டது என்று பொலிஸார் தெரிவித்தனர்.
காரில் பயணித்த 8 பேரில் 4 பேர் சம்பவ இடத்தில் உயிரிழந்தனர். இருவர் படுகாயமடைந்து வவுனியா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
காரின் சாரதியும் சிறுவன் ஒருவனும் காரில் இருந்து பாய்ந்து தப்பித்தனர்.
சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
நெடுந்தீவு மேற்கைச் சேர்ந்த இசைஞானவதி யோகரத்தினம் (வயது-56), அவரது இளைய மகளளான சுவீடனில் வசிக்கும் கமலநாதன் சிவரஞ்சனி (வயது-30), மூத்த மகளான காண்டீபன் யமுனாரஞ்சனி (வயது-32), மகளான காண்டீபன் டிசாலினி (வயது-13) ஆகிய நால்வரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
சுவீடனில் வசிக்கும் ஜேம்ஸ் கமலநாதன் (வயது-34), அவரது மகள் கமலநாதன் ஜெசிகா (வயது-6) ஆகிய இருவரும் படுகாயமடைந்தனர்.
கிளிநொச்சியைச் சேர்ந்த முத்தையா ரெட்டியார் (வயது-53) என்ற காரின் சாரதி விபத்தையடுத்து பொலிஸாரால் கைது செய்யப்பட்டார்.