நெடுந்தீவு பிரதேச செயலக பகுதியில் வன ஜீவராசிகள் திணைக்களத்தால் வர்த்தமானி மூலம் உள்வாங்கப்பட்ட 1,840 ஹெக்ரயர் நிலப்பரப்பில் தனியார் காணிகள் உள்ளடக்கப்பட்டிருப்பின் குறித்த காணி உமையாளர்கள் தமது காணியை உறுதிப்படுத்தும் ஆவணங்களை நெடுந்தீவு பிரதேச செயலர் ஊடாக வனஜீவராசிகள் திணைக்களத்துக்கு அனுப்பி வைக்குமாறு வனப் பாதுகாப்பு மற்றும் வனஜீவராசிகள் அமைச்சின் வடக்கு மாகாண இணைச்செயலாளர் மா.பரமேஸ்வரன் தொிவித்துள்ளார்.
நேற்று வனப் பாதுகாப்பு வனஜீவராசிகள் திணைக்களத்தினால் பொது மக்களின் காணிகள் அபகரிக்கப்பட்டதாக கடந்த முதலாம் திகதி நெடுந்தீவு பிரதேச செயலக மண்டபத்தில் இடம்பெற்ற ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டத்தில் குற்றம் சாட்டப்பட்ட நிலையில் குறித்த கூட்டத்தில் கலந்து கொண்ட வனப் பாதுகாப்பு மற்றும் வனஜீவராசிகள் அமைச்சின் வடக்கு மாகாண இணைச்செயலாளர் மா.பரமேஸ்வரன் இப் பிரரச்சினைக்கு தீர்வு காணும் முகமாக நேற்றைய தினம் மக்கள் சந்திப்புக்கு ஏற்பாடு செய்திருந்தார்.
நெடுந்தீவு பிரதேச செயலர் தலைமையில் இடம்பெற்ற கூட்டத்தில் 600 வரையான ஹெக்ரயர் நலத்தினை வனப் பாதுகாப்பு மற்றும் வனஜீவராசிகள் திணைக்களத்துக்கு வழங்குவதாக திர்மானிக்கப்பட்ட போதும் குறித்த நலப்பரப்பு நெடுந்தீவிலுள்ள குதிரைகளை பராமக்க போதாதென வன ஜீவராசிகள் திணைக்கள இணைச்செயலாளரால் சுட்டிக்காட்டப்டுள்ளது.
இந்நிலையில் குறித்த 600 ஹெக்ரயர் நலப்பகுதியை தவிரவேறு நலப்பரப்பை வழங்க மறுத்த நலையில் வன ஜீவராசிகள் திணைக்களம் குதிரைகளை பராமப்பதற்கும் தேசியப் பூங்கா ஒன்றை அமைத்து நடைமுறைப்படுத்துவதற்கும் குறித்த 600 ஏக்கர் நலம் போதுமானதவல்ல என தெவித்தார்.
இந்நிலையில் நெடுந்தீவில் குதிரைகளை தமது வருமான மார்க்கத்துக்காக பயன்படுத்த விரும்புவோர் பிரதேச செயலர் ஊடாக வனஜீவராசிகள் திணைக்களத்துக்கு விண்ணப்பித்து ஒருவர் இரு குதிரைகளை பெறடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.