நெடுந்தீவு – குறிக்கட்டுவான் படகு சேவை ஆரம்பம்

nainathevu-haberயாழ்ப்பாணம் நெடுந்தீவு – குறிக்கட்டுவான் பகுதிகளுக்கு இடையிலான படகு சேவை நேற்று முதல் உத்தியோகபூர்வமாக ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

கடற்படையினரும், வீதி அபிவிருத்தி திணைக்களத்தினரும் இணைந்து இந்த படகு சேவையை நடத்துகின்றனர்.

நேற்றைய தினம் இதற்காக விசேட நிகழ்வு ஒன்று இடம்பெற்று, படகு சேவை மீண்டும் ஆரம்பிக்கப்பட்டது.

50 சதுர கிலோமீற்றர் பரப்பில் நீள் வட்டமாக அமைந்துள்ள இந்த தீவின் நீளம், 8 கிலோமீற்றர்கள், அகலம் 6 கிலோமீற்றர்கள். இதற்கான படகு சேவை சில வருடங்களாக இடைநிறுத்தி வைக்கப்பட்டிருந்த நிலையில் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

Related Posts