நெடுந்தீவு குமுதினிப் படகு பணியாளர் ஒருவர் சிறிலங்கா கடற்படையினருடைய மூர்க்கத்தனமாக தாக்கப்பட்டுள்ளார். இச் சம்வம் நேற்று காலை குறிகாட்டுவான் இறங்கு துறையில் இடம்பெற்றுள்ளது.நெடுந்தீவு 13 ஆம் வட்டாரத்தைச் சேர்ந்த எஸ்.பாலசிங்கம் (வயது 64) என்னும் வீதி அபிவிருத்தி அதிகார சபைக்குச் சொந்தமான குமுதினிப் படகுக் பணியாளரே மேற்படிச் சம்பத்தில் தாக்குதலுக்கு உள்ளாக்கப்பட்டவர் ஆவர்.
மேற்படிச் சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது.
நேற்றுக் காலை 10 மணிக்கு குமுதினிப் படகு நெடுந்தீவு நோக்கி புறப்பட தயாரான நிலையில் குறிகாட்டுவான் இறங்கு துறையில் அணைக்ப்பட்டிருந்தது.
அச் சமயம் அங்கு வந்த கடற்படையினர் உடனடியாக படகை அங்கிருந்து அகற்றி கடலில் நங்கூரமிட்டு தரித்து நிற்குமாறு கூறியுள்ளனர்.
அச் சமயம் படகோட்டிகள் குறிகட்டுவான் பகுதியில் உள்ள கடைத்தெருவிற்குச் சென்று விட்டதால் உடனடியாக படகினை அங்கிருந்து அகற்ற முடியாது என்று குறித்த படகுப் பணியாளர் தெரிவித்திருந்தார்.
இதனால் ஆத்திரமடைந்த கடற்படையினர் குறித்த பணியாளரை படகில் இருந்த துறைமுகத்திற்கு இழுத்து அவர் மீது கணமூடித்தனமாக தாக்குதல் மேற்கொண்டுள்ளனர்.
சம்பவத்தை அறிந்து ஓடிவந்த மற்றைய படகு பணியாளர்கள் அனைவரும் ஒன்றிணைந்து படகுச் சேவை தங்களால் நடத்த முடியாது என்று தெரிவித்து அங்கிருந்து சென்றுள்ளனர்.
இவர்களின் சேவைப் பகிஷ்கரிப்பால் ஏராளமாக பயணிகள் நடு வழியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தனர்.
இதனை அடுத்து சம்பவ இடத்திற்கு வருகை தந்த கடற்டை உயர் அதிகாரிகள் நிலமையைப் புரிந்து கொண்டு இரு தரப்பினரையும் சமாதானம் செய்து, நடந்த சம்பவத்திற்கு மன்னிப்பும் கோரியுள்ளனர்.