நெடுந்தீவின் வீதிகள் மற்றும் பொது இடங்களில் வைக்கப்பட்ட கார்த்திகைப் பூக்களால் கடற்படையினர் பாதுகாப்புக் கெடுபிடிகளை அதிகரித்தனர்.
அத்துடன் ரோந்து நடவடிக்கைகளையும் அதிகரித்துள்ளனர். தமிழீழ விடுதலைப் புலிகளின் மாவீரர் வாரம் ஆரம்பமாகிய நிலையில் இறுதி நாளான 27 ஆம் திகதியும் அண்மித்து வருகிறது.
இந்நிலையில் விடுதலைப் புலிகள் தேசிய மலராகப் பிரகடனப்படுத்திய கார்த்திகைப் பூக்கள் நேற்று மதியம் நெடுந்தீவின் முதலாம்,இரண்டாம் வட்டாரப் பகுதிகளின் வீதிகள், பொது இடங்களில் பரவலாக வைக்கப்பட்டன.
போத்தல்களில் வைக்கப்பட்டே கார்த்திகைப் பூக்கள் காணப்பட்டன. இதையடுத்து அங்கு வந்த கடற்படையினர் அவற்றை எடுததுச் சென்றனர். அத்துடன் அப்பகுதிகளில் பாதுகாப்புக் கெடுபிடிகளையும் அதிகரித்துள்ளனர். ரோந்து நடவடிக்கைகளும் தீவிரப்படுத்தப்பட்டன.