நெடுந்தீவில் கடல் நீரை நன்னீராக மாற்றும் திட்டம் 3 மாதகாலத்தில் சாத்தியமாகும்

KKS-kabar-carbar-seeநெடுந்தீவில் கடல் நீரினை நன்னீராக மாற்றி குடிநீராக பயன்படுத்தப்படவுள்ளதாகவும், இது 3 மாதகாலப்பகுதியில் சாத்தியமாகும் எனவும் தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபையின் சமூகவியளாலர் திருமதி பாலகுமாரி ஐங்கரன் நேற்று தெரிவித்தார்.

தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகால் அமைப்புச் சபையில்இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

சமூகமயப்படுத்தப்பட்ட கிராமிய நீர் வழங்கல் மற்றும் சுகாதாரத்திட்டத்தின் கீழ் இந்த நன்னீர் திட்டம் முன்னெடுக்கப்படுகின்றது. நெடுந்தீவில் தலா 50 மீற்றர் கியூப் நீரினை உற்பத்தி செய்யக்கூடிய 2 இயந்திரங்கள் பொருத்தப்பட்டு இந்தத் திட்டம் செயற்படுத்தப்படவுள்ளது.

ஒரு மீற்றர் கியூப் நீரினை நன்னீராக்குவதற்கு 160 ரூபாய் செலவாகும். யாழ்ப்பாணத்தில் இருந்து நெடுந்தீவுக்கு குடிநீர் கொண்டு செல்லும் செலவினை பார்க்கிலும் கடல் நீரினை நன்னீராக மாற்றும் செலவு குறைவு. ஆனால் இத்திட்டத்தினை யாழ். மாவட்டம் முழுவதும் செயற்படுத்த முடியாது ஏனெனில் இதன் செலவு அதிகமாகும் என அவர் மேலும் தெரிவித்தார்.

Related Posts