நெடுந்தீவில் உயிரிழக்கும் குதிரைகள்! பிரதேச சபைமீது மக்கள் விசனம்!!

யாழ்.நெடுந்தீவு பகுதியில் வறட்சி காரணமாகவும் உரிய பராமரிப்பு இன்றியும் குதிரைகள் உயிரிழந்து வருவதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

தற்போது நீடிக்கும் வறட்சி காரணமாக, குடிப்பதற்கு நீர் இன்றி இதுவரை சுமார் 10 குதிரைகள் உயிரிழந்துள்ளதாக மக்கள் தெரிவிக்கின்றனர்.

குதிரைகளின் உயிரிழப்பு தொடர்பில் நெடுந்தீவு பிரதேச செயலகம் மற்றும் பிரதேச சபைக்கு அறிவிக்கப்பட்ட போதிலும், எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லையென பொதுமக்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.

அத்தோடு, குதிரைகள் உரிய பராமரிப்பின்றி காணப்படுவதால், மேலும் பல குதிரைகள் உயிரிழக்கும் அபாயம் காணப்படுவதாக தெரிவிக்கும் மக்கள், அருகி வரும் இவ் உயிரினத்தை பாதுகாக்க அரச திணைக்களங்கள் நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரிக்கை விடுக்கின்றனர்.

Related Posts