நெடுந்தாரகை பயணிகள் படகு போக்குவரத்து சேவை இன்று ஆரம்பம்

குறிகட்டுவான் நெடுந்தீவுக்கிடையிலான நெடுந்தாரகை பயணிகள் படகு போக்குவரத்து சேவை இன்று ஆரம்பமாகிறது.

இதுதொடர்பான நிகழ்வில் இலங்கைக்கான அவூஸ்ரேலியத் தூதுவர் , உலக வங்கியின் இலங்கைக்கான பணிப்பாளர் மாகாண சபைகள் மற்றும் உள்ளுராட்சி அமைச்சர் பைசல் முஸ்தபா ஆகியோர் கலந்துகொள்ளவுள்ளனர்.

இலங்கை படகுகட்டுமான நிறுவனமான டொக்கியாட் நிறுவனத்திளால் இந்த நெடுந்தாரகை பயணிகள் படகு தயாரிக்கப்பட்டுள்ளது. இதற்கு 150 மில்லியன் ரூபா செலவிடப்பட்டுள்ளது.

Related Posts