நூற்றுக்கணக்கான அரசியல் கைதிகள் சிறையில் இல்லை -எம்.ஏ.சுமந்திரன்

சிறைகளில் நீண்டகாலமாக நூற்றுக்கணக்கான அரசியல் கைதிகள் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர் என்று கூறுவது தவறானது. குறைந்தளவானவர்களே சிறைகளில் உள்ளனர். அவர்களிலும் குற்றம் இனங்காணப்படாதவர்கள் சொற்ப அளவிலேயே இருப்பதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.

ஒருங்கிணைந்த நல்லிணக்கத்துக்கான வழிமுறைகளுக்கான இணையத்தளம் யாழ்ப்பாணம் மாவட்டச் செயலகத்தில் வைத்து வெள்ளிக்கிழமை (12) அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டது, அதில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.

அவர் அங்கு தொடர்ந்து கூறுகையில்,

சிறைகளில் இருப்பவர்களில் பெரும்பாலானர்கள் ஏற்கனவே குற்றம் இனங்காணப்பட்டு, தண்டனை வழங்கப்பட்டவர்கள் ஆவார்கள். குற்றம் இனங்காணப்படாதவர்கள் அண்மையில் கைதானவர்கள்.

ஆனால், நாங்கள் அனைவரையும் விடுதலை செய்ய வேண்டும் என்பதை அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்து வருகின்றோம் என்றார்.

Related Posts