லெபனானின் , பெய்ரூட்டில் இடம்பெற்ற இரட்டை குண்டுவெடிப்பில் 44 பேர் உயிரிழந்ததுடன் , சுமார் 200 பேர் வரை காயமடைந்தனர்.
இக் குண்டு வெடிப்புகளின் போது நபரொருவர் தனது உயிரை பறிகொடுத்து , பல நூற்றுக்கணக்கானோரின் உயிரைக் காப்பாற்றியுள்ளார்.
அடெல் டேர்மோஸ் என்ற அந்நபர் சம்பவத்தின் போது தனது மகளுடன் சந்தைக்கு சென்றுள்ளார்.
இதன்போது ஒரு குண்டு வெடித்துள்ளது. பின்னர் மற்றுமொருவர் கூட்ட நெரிசலில் குண்டை வெடிக்க வைக்க முயன்றவேளை அவர் மீது பாய்ந்த அடெல் டேர்மோஸ் , குண்டுதாரியை கீழே வீழ்த்தியுள்ளார்.
இதன்போது குண்டு வெடித்ததில் அடெல் உயிரிழந்துள்ளார். அவருடன் இருந்த மகள் வெடிப்பில் இருந்து தப்பியுள்ளார்.
தனது தியாகத்தின் மூலம் பல நூற்றுக்கணக்கானோரின் உயிரைக் காப்பாற்றியுள்ளார் அவர். இந்நிலையில் அவரது இறுதி ஊர்வலத்தின் போது பலர் அவரது பெயரை உச்சரித்தும் , படங்களை காட்டியும் தமது நன்றியை தெரிவித்துள்ளனர்.
இத்தாக்குதலுக்கு ஐ.எஸ் இயக்கம் உரிமை கோரியுள்ளமை குறிப்பிடத்தக்கது.