வேலணை பகுதியில் உள்ள கடைக்குச் சென்று, ஆயிரம் ரூபாய் பணத்தைக் கொடுத்து அலைபேசி மீள் நிரப்பு அட்டையினை வாங்கிவிட்டு, இரண்டாயிரம் ரூபாய் கொடுத்ததாகக்கூறி மிகுதி பணத்தினை தருமாறு வர்த்தகரை அச்சுறுத்திய இருவர், இன்று கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
புதன்கிழமை இடம்பெற்ற இந்தச் சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது, “வேலணை பகுதியில் உள்ள கடைக்கு, மோட்டார் சைக்கிளில் வந்த இருவர், ஆயிரம் ரூபா பணத்தைக் கொடுத்து, 100 ரூபாய் பெறுமதியான அலைபேசி மீள்நிரப்பு அட்டையினை வாங்கியுள்ளனர்.
அதன்பின்னர், 900 ரூபாயை கடை உரிமையாளர் வழங்கியுள்ளார். 900 ரூபாயை வாங்கிய இருவரும், தங்களிடம் இருந்த 100ரூபாய் பணத்தினை கொடுத்து, “நாங்கள் கொடுத்த இரண்டாயிரம் ரூபாய் பணத்தாளை தாருங்கள்” என்று, கேட்டுள்ளனர்.
இதற்கு கடை உரிமையாளர், “நீங்கள் தந்து 1,000 ரூபாய் அதற்கான மீகுதி 900 ரூபாயை கொடுத்துவிட்டேன்” என விளக்கியுள்ளார். எனினும் அவர்கள் இருவரும், வர்த்தகரை தாக்கிவிட்டு கடையில் இருந்த பணத்தினை அபகரித்து சென்றுள்ளனர்.
குறித்த நபர்கள் வந்த மோட்டார் சைக்கிள் இலக்கத்தை குறித்துக்கொண்ட கடை உரிமையாளர், இது தொடர்பில் ஊர்காவற்துறை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.
அதனையடுத்து, விசாரணைகளை மேற்கொண்ட பொலிஸார், தாவடி மற்றும் வண்ணார்பண்னை பகுதியினைச் சேர்ந்த 27வயதுடைய சந்தேகநபர்கள் இருவரை நேற்று கைது செய்துள்ளனர்.
தொடர்புடைய செய்தி
யாழில் நூதனத்திருட்டில் ஈடுபடும் இளைஞர்கள் தொடர்பில் எச்சரிக்கை!