நுண்நிதிக் கடன் வசூலிப்பில் ஆவாக் குழு! – அமைச்சர் மங்கள சமரவீர

வடக்கில் இயங்கிவரும் நுண்நிதிக் கடன் நிறுவனங்கள் அதிக வட்டிக்கு வழங்கும் கடன்களுக்கான வட்டிகளை அறவிடுவதற்காக ஆவா கும்பலை பயன்படுத்தியுள்ளன என்று நிதி மற்றும் ஊடகத்துறை அமைச்சர் மங்கள சமரவீர பகிரங்கமாக குற்றம் சாட்டியுள்ளார்.

யாழ் குடாநாட்டில் அண்மைக்காலமாக மீண்டும் தீவிரமடைந்துள்ள வன்முறைகளுடன் தொடர்புடைய பிரதான குழுக்களில் ஒன்றான ஆவா கும்பலுடன், இராணுவம் உட்பட அரச புலனாய்வாளர்களுக்கு தொடர்புள்ளது என்று குற்றம்சாட்டப்பட்டுவரும் அமைச்சர் இந்தத் தகவலைத் தெரிவித்துள்ளார்.

கொழும்பிலுள்ள நிதி அமைச்சில் நேற்று (02.08.2018) ஊடகவியலாளர் சந்திப்பொன்றை நடத்திய நிதி அமைச்சர், வடக்கு கிழக்கு மாகாணத்தின் எட்டு மாவட்டங்கள் உட்பட 12 மாவட்டங்களைச் சேர்ந்த வறுமையில் வாடும் பெண்கள், வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களிடம் இருந்து அதிக வட்டிக்கு பெற்ற நுண்நிதிக் கடன்களை இரத்துச் செய்வதற்கு எடுத்தத் தீர்மானத்தை நடைமுறைப்படுத்த மேற்கொண்டுள்ள நடவடிக்கைகள் தொடர்பில் தெளிவுபடுத்தினார்.

நுண்கடன்களை வழங்கிய நிறுவனங்கள் தாங்கள் வழங்கிய கடனுக்கான வட்டியை அறவிடுவதற்காக சில இடங்களில் காடையர்களை பயன்படுத்தி வருவதாகவும் எமக்கு தகவல்கள் கிடைக்கப்பெற்றுள்ளன. உண்மையில் எமக்கு கிடைக்கப்பெற்ற தகவல்களுக்கு அமைய வடக்கில் இயங்கிவரும் ஆவா கும்பல் என்ற வாள் வெட்டுச் சம்பவங்களில் ஈடுபடும் கும்பல் தொடர்பில் நாம் பல தகவல்களை அறிந்திருக்கின்றோம் என்று அவர் அதில் கூறியுள்ளார்.

Related Posts