நுண்கடன் பாதிப்பிலிருந்து மக்களை பாதுகாக்க விசேட திட்டம் – ஆறு மாத்திற்கு கடனை செலுத்த வேணடாம்!!

நுண் கடன்களிலிருந்து பொது மக்களை பாதுகாக்கும் விசேட செயற்திட்டம் ஒரு மாத்திற்குள் நடைமுறைக்கு வரும் எனவும், இதேவேளை வரும் ஆறு மாத்திற்குள் நிதி நிறுவனங்கள் மற்றும் வங்கிகளில் பெற்ற கடனை மீளச் செலுத்ததேவையில்லை எனவும், இதனை அரசு உத்தியோகபூர்வமாக அறிவிக்கவுள்ளது என்றும் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா குமரத்துங்க தெரிவித்துள்ளார்.

நேற்று (03) கிளிநொச்சியில் கரைச்சி தெற்கு பல நோக்கு கூட்டுறவுச் சங்கத்தின் உணவு பதனிடல் நிலையத்தை திறந்து வைத்து உரையாற்றும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்

போரினால் பாதிக்கப்பட்ட பிரதேசத்தில் மக்களை இலக்கு வைத்து நுண்கடன் வழங்கும் நிறுவனங்களை மக்களை பாரிய கடன் சுமைக்குள் தள்ளுகின்றனனர் இதனால் பாதிக்கப்படுகின்ற பொது மக்களை பாதுகாக்கும் வகையில் அரசாங்கம் விசேட செயற்திட்டம் ஒன்றை நடைமுறைப்படுத்தவுள்ளது. இந்தச் செயற்திட்டமானது ஒரு மாத்திற்குள் நடைமுறைக்கு வரும் எனவும் தெரிவித்த சந்திரிக்கா

பொது மக்கள் இந்தக் கடன் சுமைகளை கருத்தில் கொண்டு நிதி அமைச்சும் மத்திய வங்கியும் ஒரு அறிவித்தலை விடுத்திருக்கிறது மக்கள் வங்களில் பெற்ற கடனை செலுத்த முடியாது விட்டால் இன்று தொடக்கம் அடுத்து வரும் ஆறு மாத்திற்குள் செலுத்த தேவையில்லை என்றும், இதனை குறித்த வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களையே வாடிக்கையாளர்களுக்கு அறிவிக்குமாறு அறிவித்திருந்த போது மக்களை சுரண்டுகின்ற அவர்கள் அதனை மேற்கொள்ளவில்லை எனவே அரசாங்கம் இந்த விடயத்தை விரைவில் உத்தியோகபூர்வமாக அறிவிக்கும். எனக்குறிப்பிட்ட அவர்

அரச வங்கிகள் மற்றும் வணிக வங்கிகளான மக்கள் வங்கி, இலங்கை வங்கி அத்தோடு பாரிய தனியார் வங்களில் பெற்ற கடன்களையும் ஆதாவது வருடத்திற்கு நுற்றுக்கு முப்பது வீத வட்டிக்கு பெற்ற கடன்களை ஆறு மாத்திற்குள் பொது மக்களுக்கு முடியாவிட்டால் செலுத்த தேவையில்லை ஆறு மாத்திற்கு பின்னர் அதனை செலுத்த வேண்டும் ஆனால் நிதி நிறுவனங்களில் நெருப்பு வட்டிக்கு பெற்ற கடன்களை ஆறு மாத்திற்கு செலுத்த தேவையில்லை என அவர் தெரிவித்தார்.

Related Posts