நுண்கடனை திருப்பிச் செலுத்த முடியாமல் குடும்பப் பெண் தற்கொலை

நுண்நிதி நிறுவனங்களில் கடன் பெற்றுக்கொண்டு அதனை திருப்பிச் செலுத்த முடியாமல் மூன்று பிள்ளைகளின் தாய் ஒருவர் அதிக மாத்திரை வில்லைகளை உட்கொண்டு உயிரிழந்துள்ளார்.

இச்சம்பவம் வவுனியா வேப்பங்குளத்தில் இடம்பெற்றுள்ளதுடன் அவரின் இறுதிக் கிரியைகள் நேற்று (வியாழக்கிழமை) இடம்பெற்றது.

வவுனியா வேப்பங்குளம் பகுதியில் கடந்த 5ஆம் திகதி நுண்கடன் நிறுவனங்களில் பெற்றுக்கொள்ளப்பட்ட கடன் தொகையைச் செலுத்த முடியாத காரணத்தினால் அளவிற்கு அதிகமான மாத்திரை வில்லைகளை உட்கொண்ட நாகராசா பரமேஸ்வரி என்ற 45 வயதுடைய மூன்று பிள்ளைகளின் தாய் வவுனியா பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.

எனினும் அளவிற்கு அதிகமான மாத்திரைகளை உட்கொண்டதால் பக்கவிளைவினை எதிர்கொண்ட குறித்த பெண் தொடர்ந்து சிகிச்சை பெற்ற நிலையில் எதுவித முன்னேற்றமும் இன்றி வைத்தியசாலையிலிருந்து வீடு செல்ல அனுமதியளிக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில் குறித்த பெண்மணி தனது வீட்டில் உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.

Related Posts