“நீர் பிறக்கும்போது அரசியல்வாதியாகப் பிறக்கவில்லை” – யாழ் மாநகர துணை முதல்வர் ஈசனை விரட்டிய பொது மக்கள்

கொழும்புத்துறையில் யாழ் மாநகரசபை முதல்வரின் ஒத்துளைப்போடு தனியார் சிலரால் மூடப்பட்ட வீதியை மீண்டும் திறக்கக்கோரி போராடிவரும் மக்களை தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் சந்தித்து கலந்துரையாடியபோது அதனை அறிந்து அங்கு வந்து குழப்பத்தில் ஈடுபட்ட குறித்த பிரதேசத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றிருந்த யாழ் மாநகர சபை உறுப்பினரும் துணை முதல்வருமான துரைராசா ஈசன் பிரதேச பொதுமக்களால் வீதியில் இடைமறிக்கப்பட்டு விரட்டப்பட்டுள்ளார்.

கொழும்புத்துறையில் யாழ் மாநகரசபை முதல்வரின் ஒத்துளைப்போடு தனியார் சிலரால் கொங்கிறீற் தூண்கள் இடப்பட்டு மூடப்பட்டிருந்தது. அதனைத் தகர்த்த மக்கள் மேலும் பிரச்சனைகள் வராத வகையில் குறித்த வட்டார உறுப்பினர் என்றவகையில் ஈசனுக்கு தெரியப்படுத்தியிருக்கிறார்கள். எனினும் ஈசனின் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாத நிலையில் மீண்டும் மிண்டும் வீதியை மூடுவதும் பின்னர் மக்கள் இணைந்து அதனை அகற்றுவமாக பிரச்சனை நீடித்திருக்கிறது.

இந்நிலையில் குறித்த வீதியை நிரந்தரமாக மூடுமாறு உத்தரவிடும் யாழ் மாநகர ஆணையாளரின் ஒப்பத்துடன் கூடிய கடிதம் அனுப்பப்பட்டிருந்தது. அதனையடுத்து குறித்த பிரதேச மக்கள் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் உதவியை நாடியிருந்தனர்.

சட்ட ரீதியாகவும் மாநகரசபை ரீதியாகவும் தமக்கு ஒத்துளைப்பு வழங்குமாறு கோரிக்கை விடுத்திருந்த நிலையில் நேற்று (25) மாலை தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் உறுப்பினர்கள் குறித்த வீதியைப் பார்வையிட்டிருந்தனர்.

அதனை அறிந்து அவ்விடத்திற்கு வந்த துணை முதல்வர் ஈசன் வந்த வேகத்தில் எனது வட்டாரத்திற்குள் என்னைக் கேட்காது யார் உங்களை வரச் சொன்னது என தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் உறுப்பினர்களை நோக்கி கேள்வி கேட்டுள்ளார்.

இதனால் கோபமடைந்த அப்பகுதி மக்கள் நீர் ஒன்றரை மாதத்துக்கு மேலாகியும் குறித்த பிரச்சனையை ஒழுங்காக கையாளாததால்தான் இன்று நிரந்தரமாக வீதியை மூடுமாறு மாநகரசபை கடிதம் அனுப்ப்பியருக்கிறது. அதனால்தான் நாம் இவர்களை அழைத்தோம் என கூறி ஈசனுடன் வாக்குவாத்தில் ஈடுபட்டனர்.

அதன்போது அங்கு நின்றிருந்த ஈசனுடன் குறித்த வட்டாரத்தில் போட்டியிட்டு 10 வாக்குகளால் தோல்வியடைந்திருந்த தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் உறுப்பினரை நோக்கி நீர் பதவியில் இல்லை. நீர் இங்கு நிற்கும் மனிதர்களைப் போல சாதரண மனிதன் உம்மிடம் அதிகாரம் இருக்கென்றா நீர் கதைக்க வந்தீர் என எச்சரித்தார்.

இதனால் மேலும் கோபமடைந்த அங்கிருந்த மக்கள் நீர் ஒன்றும் அரசியல்வாதியாகப் பிறக்கவில்லை. நாங்கள் போட்ட வாக்கில் தான் நீர் வெற்றிபெற்றீர் எனக் கூறியதோடு ஈசனை அங்கிருந்து வெளியேற்றினர்.

Related Posts