நீர்வீழ்ச்சியில் சிக்கி நடிகர் மரணம்!

அறிமுக இயக்குனர் விஜய் இயக்கத்தில் உருவாகி வந்த ‘கககபோ’ படத்தில் நாயகனாக அறிமுகமானவர் கேசவன். இவர் நேற்று முன்தினம் மாலை சுமார் 6 மணியளவில் மலேசியாவில் பெற்றோருடன் நீர்வீழ்ச்சிக்கு சென்றிருந்தபோது, தவறி விழுந்து தண்ணீரில் இழுத்துச் செல்லப்பட்டார்.

new-actor-kakakpooo

தண்ணீரில் இழுத்துச் செல்லப்பட்ட அவரை மலேசியா காவல் துறையினர் தீவிரமாக தேடி வந்தனர். இந்நிலையில், நேற்று அவர் பிணமாக மீட்கப்பட்டுள்ளார். கேசவனின் மரணம் அவரது பெற்றோரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

சில நாட்களுக்கு முன்தான் கேசவன் நடித்துள்ள ‘கககபோ’ படத்தின் படப்பிடிப்பு முடிந்துள்ளது. அடுத்த வாரம் இசை வெளியீட்டு விழா நடைபெற இருந்த நிலையில், இப்படத்தின் நாயகன் கேசவன் இறந்த செய்தி படக்குழுவினரை மிகவும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. படக்குழுவினர் அனைவரும் கேசவன் மரணத்துக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

Related Posts