நீர்கொழும்பில் வர்த்தக நிலையத்திற்கு தீ வைப்பு

நீர்கொழும்பு – கொச்சிக்கடை பிரதேசத்தில் 05 மாடிகள் கொண்ட வர்த்தக நிலையம் ஒன்றிற்கு இனந்தெரியாத சில நபர்களினால் தீ வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த சம்பவம் நேற்று (வியாழக்கிழமை) மாலை இடம்பெற்றுள்ளதுடன், இதன் காரணமாக குறித்த கட்டடம் பாரியளவில் சேதமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த நீர்கொழும்பு நகரசபை தீயணைப்பு பிரிவினர் தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துள்ளனர்.

சம்பவம் தொடர்பாக கொச்சிக்கடை பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

Related Posts