நீரை மக்கள் குடிக்கலாமா? கூடாதா? – நாளை பேரணி

கழிவு நீர் மாசடைதலினால், பல்வேறு தரப்பினரிடமும் உதவிக்காக அணுகிய போதும், குறைந்த பட்ச ஜனநாயக உரிமை கிடைக்கவில்லை என கோரி, மக்கள் பேரணி ஒன்றினை மேற்கொள்ள தீர்மானித்துள்ளனர்.

chunnakam-watter

தூய நீருக்கான பாதிக்கப்பட்ட மக்கள் ஒன்றியம் மற்றும் இயற்கை மற்றும் சுற்றுச் சூழல் பாதுகாப்பு அமையம் விதை குழுமம் ஆகியன இணைந்து, இந்த பேரணியை ஏற்பாடு செய்துள்ளனர்.

இந்த பேரணி நாளை (07) காலை 8 மணிக்கு நல்லூர் ஆலய முன்றலில் ஆரம்பமாகவுள்ளது.

இந்த பேரணி யாழ். கோவில் வீதி வழியாக வடமாகாண முதலமைச்சர் காரியாலயத்திற்கு சென்று அங்கு முதலமைச்சரிடம் மகஜர் ஒன்றினையும் கையளிக்கவுள்ளதுடன், வடமாகாண ஆளுநர் மற்றும் அரசாங்க அதிபர் உள்ளிட்டவர்களிடம் மகஜர் ஒன்றினையும் கையளிக்கவுள்ளனர்.

அந்த பேரணியின் போது, வடமாகாண சபையினால் வெளியிடப்பட்ட 40 கிணறுகளின் பரிசோதனை அறிக்கை தெளிவின்மையினால் மக்கள் மத்தியில் குழப்பங்கள் ஏற்பட்டுள்ளன. அதனடிப்படையில், குறித்த குடிநீரை மக்கள் குடிக்கலாமா, கூடாதா? ஏன்ற கேள்விக்கு பதிலளிக்கமாறும் கோரி இந்த பேரணியினை முன்னெடுக்கவுள்ளனர்.

இந்த பேரணியில் அனைவரினது ஒத்துழைப்பினையும் வழங்குமாறும் இந்த அமைப்பினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

Related Posts