நீரிழிவு நோய்க்கு நிதி சேகரிக்க ‘பச்சை மிளகாய் சவால்’: மிளகாய் உண்ட புத்திக பத்திரண!

நோய் ஒன்றால் பாதிக்கப்படும் மக்களுக்கு நிதி சேகரிப்பு செய்யவென அறிமுகப்படுத்தப்பட்டு உலகம் முழுவதும் ´ஐஸ் பக்கட் செலன்ஞ்´ என்ற பெயரில் பிரபல்யம் அடைந்துள்ள வேலைத்திட்டத்தை ஒத்த முக்கிய திட்டமொன்றை ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் புத்திக பத்திரண ஏற்றுக் கொண்டுள்ளார்.

1252948766buddika

இலங்கையில் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டுள்ளவர்களுக்கு உதவி செய்யும் வகையில் இளைஞர்கள் சிலர் இந்த புதிய திட்டத்தை அறிமுகம் செய்துள்ளனர்.

´ஐஸ் பக்கட் செலன்ஞ்´ திட்டத்திற்கு எதிராக ´பச்சை மிளகாய் சவால்´ என்ற திட்டத்தை இளைஞர்கள் அறிமுகம் செய்துள்ளார்.

1930ஆம் ஆண்டு வல்லாதிக்கவாதிகள் அறிமுகப்படுத்திய ´பொபி மல்´ திட்டத்திற்கு எதிராக இலங்கை இடதுசாரி சக்திகள் உருவாக்கிய ´சூரியமல்´ திட்டத்தைப் போன்று புதிய ´பச்சை மிளகாய் சவால்´ திட்டம் அமைவதாக புத்திக பத்திரண தெரிவித்துள்ளார்.

இந்த சவாலை ஏற்கும் முகமாக பாராளுமன்ற உறுப்பினர் புத்திக பத்திரண இன்று வியாழக்கிழமை நாராஹென்பிட்டியில் ஊடக சந்திப்பு நடத்தி மூன்று பச்சை மிளகாய்களை குறுகிய நேரத்தில் உண்டதுடன் நிதி உதவியும் வழங்கினார்.

சவாலின் விதிகள்படி சவால் விடுக்கப்படும் நபர் அந்த சவாலை ஏற்றுக் கொண்டால் 100 ரூபா நிதி உதவி அளிக்க வேண்டும். சவாலை ஏற்காவிடின் 1000 ரூபா வழங்க வேண்டும். சவால் விடப்படும் நபர்கள் தங்களும் ஐவருக்கு சவால் விடுக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

சவாலுக்கு செலுத்த வேண்டிய தொகை 100 ரூபா என்றபோதும் புத்திக பத்திரண அதற்கும் மேலதிகமான நிதியை செலுத்தினார்.

அத்துடன், ஐ.தே.க பாராளுமன்ற உறுப்பினர் பாலித்த தெவரப்பெரும, கல்வி சேவைகள் அமைச்சர் துமிந்த திஸாநாயக்க, ஜனநாயகக் கட்சியின் மேல் மாகாண சபை உறுப்பினர் கே.டி.அருண தீபால், ஊடகவியலாளர் சமன் பிரியன்கர நம்முனிகே மற்றும் நடிகர் காவிந்த பெரேரா ஆகியோருக்கு புத்திக பத்திரண ´பச்சை மிளகாய் சவால்´ விடுத்துள்ளார்.

Related Posts