முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்றத்தினால் தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள முள்ளிவாய்க்கால் பகுதியில் இறுதி யுத்தத்தில் உயிரிழந்த தமிழ் மக்களை நினைவுகூர்ந்து அஞ்சலி செலுத்தப்பட்டுள்ளது.
நீதிமன்றத்தினால் தடை உத்தரவு பிறப்பிக்கப்படுவதற்கு முன்னர் யுத்தத்தில் உயிரிழந்த தமிழ் மக்களை நினைகூரும் விதமாக பெயர்கள் பொறிக்கப்பட்ட நினைவுக்கற்கள் நாட்டதாக நிகழ்வில் ஏற்பாட்டுக் குழு தெரிவித்துள்ளது.
நீதிமன்ற தடை உத்தரவு காரணமாக நினைவுக்கற்களை நாட்டுவதற்கு ஏற்பாடுசெய்த அருட்தந்தை எழில்ராஜன் இன்றைய அஞ்சலி நிகழ்வுகளில் கலந்துகொள்ளவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது.
அஞ்சலி நிகழ்வுகளுக்கு முல்லைத்தீவு மாவட்ட வர்த்தகர்கள் கடைகளை மூடி தமது ஆதரவை வழங்கியுள்ளனர். அத்துடன் முள்ளிவாய்க்கால் பகுதியில் பாதுகாப்பு பணிகளில் அதிக பொலிஸார் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.