நீதிமன்றத் தீர்ப்பு அநீதியானது என தேர்தல் ஆணைக்குழு உறுப்பினர் கூல் தெரிவிப்பு

மாவிட்டபுரம் கந்தசுவாமி ஆலயத்தில் தேர்தல் விதிமுறைகள் மீறப்பட்டு தேர்தல் விஞ்ஞாபனம் வெளியிடப்பட்டது. ஆனால் ஒரு பக்க நியாயத்தை கேட்டு , நீதிமன்றம் தீர்ப்பளித்தது அநீதியானது. என தேர்தல் ஆணைக்குழுவின் உறுப்பினர்களில் ஒருவரான றட்ணஜீவன் கூல் தெரிவித்துள்ளார்.

யாழில். வியாழக்கிழமை ஊடகவியலாளர்களை சந்தித்த போதே அவ்வாறு தெரிவித்தார்.

மேலும் தெரிவிக்கையில் ,

யாழ்.மாவிட்டபுரம் கந்தசுவாமி ஆலயத்தில் தேர்தல் விதிமுறைகளை மீறி தேர்தல் விஞ்ஞாபன வெளியீடு நடைபெற்றது. அதற்கான ஆதாரங்களை நாங்கள் பொலிசாருக்கு வழங்கி இருந்தோம். போலீசார் அதனை நீதிமன்றில் சமர்ப்பிக்க வில்லை. ஏன் அவர்கள் அதனை சமர்ப்பிக்க வில்லை.

எங்கள் நாட்டில் 500 ரூபாய்யுடன் போலீசாரை கொண்டு எதுவும் செய்யலாம். அவ்வாறு எதுவும் நடத்தா என தெரியாது. எனக்கு தெரியாத விடயத்தை நான் பேசவிரும்பவில்லை. ஏன் இந்த படங்களை போலீசார் ஏன் காட்டவில்லை.

நீதிமன்றம் ஒரு பக்க தரப்பினை வாதத்தை மட்டும் கேட்க முடியாது. மற்றைய தரப்பின் கருத்தையும் கேட்க வேண்டும். அவ்வாறு இருக்கையில் ஏன் நீதிமன்று என்னிடம் எதுவும் கேட்கவில்லை. நான் நீதிமன்றுக்கு அன்றைய தினம் செல்ல வில்லை என கூறுகின்றார்கள். ஆனால் எனக்கு மன்றுக்கு வருமாறு அழைப்பாணை தரப்படவில்லை.

நீதிமன்றம் இரு தரப்பு நியாயத்தையும் கேட்க வேண்டும். ஒரு தரப்பு நியாயத்தை கேட்டு தீர்ப்பு வழங்க முடியாது. அது மட்டுமின்றி என்னிடம் விசாரணை செய்யும் படி எனது ஆணைக்குழுவிடம் கோரியுள்ளார். நீதி படித்தவருக்கு தெரிய வேண்டும் சட்டத்தின் பிரகாரம் நாங்கள் சுயாதீன ஆணைக்குழு என்னிடம் கேள்வி கேட்க கூடிய அதிகாரம் பாராளுமன்றுக்கு தான் அதிகாரம் உண்டு. ஆணைக்குழுவுக்கு அதிகாரமில்லாத போது அதனை ஏன் நீதிமன்றம் செய்ய வேண்டும்.

சட்டத்தரணி குருபரன் அமெரிக்க ஓக்ஸ்போர்ட் பல்கலைகழகத்தில் பயின்றவர். அவருக்கு ஆங்கிலம் தெரியுமோ தெரியாது. தெரியும் என நினைக்கிறேன். நான் கட்டுரையில் “பிக் டீல்” என எழுதியது ஒரு வம்பு. அதை வைத்து நீதிபதியுடன் டீல் பேசினது என வாதாடுவது வம்பு தனமானது. இப்படியானவர்கள் தான் அரசியலை கெடுக்கின்றார்கள்.

தேர்தல் விதிமுறை மீறல்களை தடுப்பது எமது கடமை. அதனை நாங்கள் செய்கின்றோம். அதனை ஏன் நீதிமன்றம் தடுத்தது என்பது எனக்கு தெரியவில்லை. என் கருத்தை கேட்காது ஏன் தீர்ப்பு வழங்கினார்கள் என தெரியவில்லை. ஏன் நீதிமன்றம் அவரச பட்டது என்பது தெரிய வில்லை. இனி இதை பற்றி நான் கதைத்தால் நீதிமன்ற அவமதிப்பு என்பார்கள்.

இவர்கள் வாய்க்கு வந்ததை பேசுபவர்கள். அவர்கள் செய்தனை படங்களுடன் பொலிசாரிடம் முறையிடப்பட்டது. ஆனால் அதனை போலீசார் நீதிமன்றில் சமர்ப்பிக்க வில்லை.

ஆலய வளாகத்தில் தேர்தல் விஞ்ஞாபம் வெளியிடப்பட வில்லை எனில் எதற்காக ஆலய குருக்களுக்கு மன்று அறிவுறுத்தல் வழங்கியது ? ஆக எங்கோ தவறு நடந்து உள்ளது. அது எங்கே என தெரியவில்லை.

பொலிசாருக்கு கையூட்டு வழங்கி சிலர் காரியம் செய்திருக்கலாம். அல்லது இந்த வழக்கில் வழக்காடிய சட்டத்தரணிகள் அனைவரும் அதே மன்றில் வழக்காடுபவர்கள். அதனால் , பொலிசாருடன் நட்பு ஏற்பட்டு இருக்கலாம் அந்த நட்பின் அடிப்படையில் செய்து இருக்கலாம்.

பத்திரிகைகளில் மாவை கந்தன் ஆலயத்தில் தேர்தல் விஞ்ஞாபன வெளியீடு நடைபெற்றது என செய்திகள் வெளியாகி இருந்தன. ஆனால் அது தொடர்பில் பத்திரிகை ஆசிரியர்களிடம் போலீசார் விசாரணை செய்திருக்க வேண்டும். அதனை செய்யவில்லை.

அக்கட்சியின் வேட்பாளர் ஒருவர் முதலில் தனது முகநூளில் பகிர்ந்து இருந்தார். பிறகு அதனை முகநூளில் இருந்து அகற்றி விட்டார்.

ஒரு பக்க நியாயத்தை கேட்டு தீர்ப்பளித்தது அநீதியானது. நீதிவான் என்பதால் அவரின் தீர்ப்பில் நியாயம் இருக்கலாம் அது எனக்கு தெரியாது. நான் அவரை குற்றம் செல்ல வில்லை.

என்னை யாழ்.மாநகர சபை வேட்பாளர் வி. மணிவண்ணன் மிரட்டியதாக போலீசில் முறைப்பாடு செய்யபப்ட்டமை தொடர்பில் விசாரணை நடைபெறுகின்றது.முறைப்பாடு பதிவு செய்து இரண்டு கிழமைகள் ஆகிவிட்டன.

நேற்று போலீசார் வீட்டுக்கு வந்து சமாதானமாக போக விரும்பு கின்றீர்களா என கேட்டனர். நான் அவர்களுடன் சமாதானமாக போக விரும்பவில்லை. அவர்கள் காவாலி தனம் செய்கின்றார்கள். சண்டித்தனத்தில் ஈடுபடுகின்றார்கள். அவர்களுக்கு மன்னிப்பு கொடுப்பது என்றால் அவர்கள் மனம் திருந்த வேண்டும். ஆனால் அவர்கள் மனம் திருந்தின மாதிரி தெரிய வில்லை.

தேர்தல் சட்டங்களின் பிரகாரம் என்னுடைய முறைப்பாட்டின் பிரகாரம் விசாரணை நடந்து குற்றவாளியாக கண்டால் 12 மாத சிறைத் தண்டனை விதிக்கப்படும். எனக்கு அதான் வேண்டும். நீதிவான் அதனை கொடுக்க வேண்டும்.

இவர்களை அகற்றினால் தான் எமது அரசியல் புனிதமாகும். இவ்வாறன காவளிகள் தேர்தலில் போட்டியிடும் போது அரசியல் மோசமாக தான் இருக்கும். என மேலும் தெரிவித்தார்.

Related Posts