நீதிபதி இளஞ்செழியனுக்கு விசேட பாதுகாப்பு வழங்குமாறு ஜனாதிபதி உத்தரவு!

யாழ்ப்பாண மேல் நீதிமன்ற நீதிபதி மா. இளஞ்செழியனுக்கு விசேட பாதுகாப்பு வழங்க நடவடிக்கை எடுக்குமாறு பொலிஸ்மா அதிபருக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உத்தரவிட்டுள்ளார்.

யாழ்.நல்லூர் பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிப் பிரயோகத்தில் நீதிபதி இளஞ்செழியன் மெய்ப்பாதுகாவலர் ஒருவர் உயிரிழந்தார். இதனையடுத்து, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இந்த உத்தரவை விடுத்துள்ளார்.

அத்துடன், குறித்த தாக்குதல் தொடர்பில் பொலிஸ் குழுக்களை அமைத்து விசாரணைகளை மேற்கொள்ளுமாறும் ஜனாதிபதி பணித்துள்ளார்.

மேலும், சம்பவத்தில் உயிரிழந்த யாழ்ப்பாண மேல் நீதிமன்ற நீதிபதி மா .இளஞ்செழியனின் மெய்ப்பாதுகாவலரின் குடும்பத்துக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தமது அனுதாபத்தையும் தெரிவித்துள்ளார்.

Related Posts