நீண்ட விடுமுறைக்கு பின்னர் மீண்டும் திறக்கப்பட்ட பாடசாலைகள்!

அரசாங்க மற்றும் அரசாங்கத்தினால் அங்கீகரிக்கப்பட்ட தனியார் பாடசாலைகளை இன்று (திங்கட்கிழமை) முதல் மீண்டும் திறக்கப்பட்டுள்ளது.

மறு அறிவிப்பு வரும் வரை திங்கள், செவ்வாய் மற்றும் வியாழன் ஆகிய நாட்களில் மாத்திரமே பாடசாலைகள் திறக்கப்படும் எனவும், புதன் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் மாணவர்கள் ஒன்லைன் ஊடாக கற்க முடியும் எனவும் கல்வி அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இதேவேளை, தென் மாகாண சபைக்கு உட்பட்ட அனைத்து பாடசாலைகளும் இன்று முதல் ஜூலை 29 ஆம் திகதி வரை வாரத்தின் ஐந்து நாட்களும் இயங்கும் என தென் மாகாண கல்வி செயலாளர் ரஞ்சித் யாப்பா தெரிவித்துள்ளார்.

போக்குவரத்து சிரமம் காரணமாக அதிபர்கள், ஆசிரியர்கள் மற்றும் கல்விசாரா ஊழியர்கள் பாடசாலைகளக்கு சமூகமளிக்க முடியாவிட்டால், முன் அனுமதி பெற வேண்டும் எனவும் தென் மாகாண கல்வி அதிகாரிகள் தீர்மானித்துள்ளனர்.

Related Posts