நீடிக்கப்பட்டது ஊரடங்கு உத்தரவு!

நாடளாவிய ரீதியில் அமுலிலுள்ள முடக்க கட்டுப்பாடுகள் அடுத்த மாதம் முதலாம் திகதி அதிகாலை 4 மணிவரை வரை நீடிக்கப்பட்டுள்ளது.

null

ஜனாதிபதி ஊடகப் பேச்சாளர் கிங்ஸ்லி ரத்நாயக்க தமது ட்விட்டர் தளத்தில் இதனைத் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷ தலைமையில் கூடிய கொரோனா தடுப்பு தேசிய செயலணி கூட்டத்தில் இந்தத் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதற்கு முன்னதாக எதிர்வரும் 21 ஆம் திகதி வரை தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் நீடிக்கப்பட்டிருந்த நிலையில், இன்று மீண்டும் நீடிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related Posts