நீச்சல் வீராங்கனை தனுஜாவிற்கு ஆழிக்குமரன் ஆனந்தன் விருது!

நீச்சல் போட்டிகளில் பல பதக்கங்களை தனதாக்கி சாதனைபுரிந்து வரும் ஈழச் சிறுமி தனுஜா ஆழிக்குமரன் ஆனந்தன் விருது வழங்கி மதிப்பளிக்கப்பட்டுள்ளார்.

thanuja-swiming

தமிழ்நாட்டில் வசித்துவரும் வல்வெட்டித்துறையைச் சேர்ந்த தனுஜா ஜெயக்குமார் தனது நீச்சல் திறனால் அனைவரையும் திரும்பிப் பார்க்க வைத்துள்ளார். இவரது திறமைக்கு மதிப்பளித்து ஐக்கிய இராச்சியம் (பிரித்தானியா) வல்வை நலன்புரிச் சங்கத்தின் சார்பில் 2015 ஆம் ஆண்டிற்கான ‘ஆழிக்குமரன் ஆனந்தன்’ நினைவு விருது வழங்கப்பட்டுள்ளது.

மாவட்ட அளவில் நடைபெற்ற 10 வயதிற்குட்பட்ட பல்வேறு போட்டிகளில் பங்கேற்று வெற்றி பெற்ற தனுஜா ஜெயக்குமார் கடந்த மாதம் நடைபெற்ற மாநில அளவிலான நீச்சல் போட்டியில் கலந்து கொண்டு 50 மீட்டர் Butter Fly நீச்சல் போட்டியில் இரண்டாம் இடத்தைப் பிடித்துள்ளார். ஒரு வினாடியில் தங்கப்பதக்க வாய்ப்பினை இழந்த தனுஜா 39 வினாடிகளில் குறித்த தூரத்தை கடந்து வெள்ளிப்பதக்கத்தை தனதாக்கியுள்ளார்.

இந்த வெற்றியின் மூலம் இந்திய தேசிய அளவிலான போட்டிக்கு முன்னோடியாக நடைபெறும் தகுதிச்சுற்றுப் போட்டியில் கலந்து கொள்ளும் வாய்ப்பினை தனுஜா பெற்றிருந்தார்.

இதனைத்தொடர்ந்து தஞ்சையில் நடைபெற்ற போட்டியில் ஒரு தங்கம், ஒரு வெள்ளி பதக்கங்களையும் சென்னையில் நடைபெற்ற போட்டியில் 2 தங்கம் ஒரு வெள்ளி ஒரு வெண்கலம் என நான்கு பதக்கங்களை வென்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related Posts